Saturday, March 7, 2026

அந்த முகம்



அது ஒரு மலைக்கோயில்.  

நானும் எனது தாயாரும் ஒரு சிறுவனும் சென்றுள்ளோம்.  தரிசனத்திற்க்காக சென்றபோது கருவரையுண்ணுள்ளே காரிருள்.  

சுற்றிவந்து ஒரு மரத்தின் அடியில் அமர்தோம்.  

தரிசனம் கிடைக்காத ஏக்கத்தில் மீண்டும் சன்னதிக்குச்சென்றேன்.  ஒன்றும் தெரியவில்லை. இங்கு வந்து என்னது தந்தை எத்துணை வருடங்கள் தரிசனம் செய்துள்ளார், என்றபோதும் எனக்கு தரிசனம் அமையவில்லையே என்று கண்ணீர் வடித்தேன். 

திடீர் என உள்ளே ஒருவர் ஒரு தீபத்தை எடுத்து அந்த ஐயனின் முகத்தருகே காட்டினார். பிரசன்ன வதனம் கண்டேன். கண்ணீர் ஆ னந்தக்கண்ணீராக மாறியது. உள்ளம் உவகையில் கூத்தாடியது.  

அப்படியே நேராக உள்ள படி வழியே இறங்கிவிட்டேன். 

மரத்தால் ஆன அந்தப் படிகளில் ஒன்றிரண்டு உடைந்திருந்தன. ஏற முடியாது. இறங்கத்தான் முடியும்.  இறங்கிவிட்டேன். 

பிறகுதான் நினைவு வந்தது, தாயாரும் அந்தச்சிறுவனும் உள்ளே மரத்தின் அடியில் அமர்திருக்கின்றார்கள் என்று.  

இப்போது உள்ளே போகும் வாயில் மூடப்பட்டு ஓரு பெரும் கூட்டம் உள்ளே செல்லக்காத்து நின்றது.  

என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றேன். கனவு கலைந்தது. விடிந்துகொண்டிருந்தது.
 

Dignity over Success

We are in the midst of thirst for success.  At any cost. In this context, there is a poem in the #Purananooru by #Vennikkuyathiyar It goes l...